தி.மு.க நிர்வாகியின் மகள் கைது

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த சாந்தி பிரியா, தன்னுடன் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளர் ராஜு, கேசியர் நந்தினி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் ஆகியோருடன் இணைந்து 81 வாடிக்கையாளர்களின் கடன் கணக்குகளிலிருந்து ஒரிஜனல் தங்க நகைகளை எடுத்துவிட்டு போலி நகைகளை வைத்துள்ளனர். அந்த நிறுவனம் நடத்திய ஆய்வின் போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நிறுவன அதிகாரிகள் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தனர். இதில், ராஜு, நந்தினி, விஜயகுமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். சாந்தி பிரியா தலைமறைவானார். தனிப்படை போலீசார் சாந்தி பிரியாவை கர்நாடக, கேரளா பகுதிகளில் தேடி வந்தனர். பின்னர் ஊட்டியில் அவரை கைது செய்தனர். சாந்தி பிரியாவின் தந்தை நடராஜன், மஞ்சூர் அருகே பிக்கட்டி பேரூரில் தி.மு.க கழக செயலாளராக உள்ளார்.