லவ் ஜிஹாத் சந்தேகம்

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரின் சில்தாரா பகுதியில் 24 வயதான மோனிகா யாதவ் வசித்து வந்தார். இவர் பேங்க் ஆஃப் பரோடாவில் பணிபுரிந்து வந்தார். அவர், பன்புரி பகுதியில் வசித்து வந்த வாஹித் அலி என்ற முஸ்லிம் இளைஞனின் காதல் வலையில் விழுந்தார். மோனிகாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவர் குடும்பத்தினரிடம் வாஹித் வற்புறுத்தினார். ஆனால் இதற்கு மோனிகாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சில நாட்களுக்கு பிறகு வாஹித் அலி, மோனிகாவை அவரது அலுவலகத்திற்கு சென்று பார்த்தார். மோனிகா தன்னிடம் பேச வேண்டும், வெளியில் வரவேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மோனிகா தன்னுடன் வர சம்மதிக்கும் வரை அவர் வங்கியில் இருந்தார். வேறுவழியின்றி மோனிகா அவருடன் சென்றார். இருவரும் இருசக்கர வாகனத்தில் நவ ராய்பூருக்கு சென்றனர். ஆனால், அந்த இளம் பெண் வீட்டிற்கு சடலமாகத்தான் திரும்பினார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மோனிகா நிலைத்தவறி கீழே விழுந்ததாகவும் அதனால் தலையில் அடிபட்டதாகவும் வாஹித் அலி கூறி மோனிகாவை பால்கோ மருத்துவமனையில் அனுமதித்தார் அலி. ஆனால் மருத்துவர்கள் அவரை டெலிபண்டா மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக வாஹித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பஜ்ரங் தள் ஆர்வலர்கள், இது திட்டமிட்ட ‘லவ் ஜிஹாத்’ படுகொலை, ஆனால் இது விபத்து போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என கூறினர். மோனிகாவின் குடும்பத்தினர், அலி, மோனிகாவின் மரணம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மூலம் தான் இது தெரியவந்தது. அவளை பால்கோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வேண்டுமென்றே அங்கு நீண்ட நேரம் வைத்திருந்தார்’ என குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஆதாரம் கிடைத்தால் கொலை வழக்கு பதிவு செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.