ஹிந்து பாரம்பரிய மாத கொண்டாட்டம்

அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்கள் எப்போது அக்டோபர் மாதம் வரும் என்று காத்திருப்பார்கள். ஹிந்துக்கள் நாட்காட்டியின் படி இது திருவிழா மாதம், நவராத்திரி, தீபாவளி என பல பண்டிகைகள் வருவதால் அதனை கொண்டாட மட்டும் அவர்கள் காத்திருப்பதில்லை. இந்த மாதத்திற்கு மற்றொரு சிறப்பு உண்டு. ஆம், இது ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. இதற்காகத்தான் அனைவரும் காத்திருக்கின்றனர். 2013 இந்த நிகழ்வு துவங்கிய இது தற்போது உலகெங்கும் பரவி வருகிறது. இது நமது ஹிந்து தர்மத்தின் மேன்மை, பாரம்பரியத்தை கொண்டாடவும் உலகுக்கு எடுத்துக்காட்டவும் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்களில் வசிக்கும் ஹிந்துக்கள் இந்த மாதத்தில் தங்களுக்கு வசதிப்பட்ட நாளில் இதனை கொண்டாடுகின்றனர். அவ்வகையில் சிகாகோவில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஹிந்து பாரம்பரிய மாத நிகழ்வில் சிகாகோவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஹிந்துக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புகழ்பெற்ற விவேகானந்தா மார்க்கில் ஒன்றிணைந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அழகு பொட்டு, பளபளக்கும் பாரம்பரிய உடை, ஆகியவற்றுடன் வந்தனர். பாரம்பரிய வாத்தியங்கள் இசைக்க, காவிக்கொடியுடன் ‘ஷோபா யாத்திரை’யை அங்கு நடத்தினர். உள்ளூர் காவல்துறையும் அரசு நிர்வாகமும் இதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொடுத்தது.