6,436 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள்

அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடத்திட்டம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடனான அவற்றின் தொடர்பு, வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றிய தகவல்களைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பை நடத்த உத்தரப் பிரதேச அரசு அறிவித்தது. அதன்படி நடைபெற்ரு வரும் கனக்கெடுப்பில் இதுவரைரை மொத்தம் 6,436 அங்கீகரிக்கப்படாத மதரஸாக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் 5,170 மதரஸாக்களில் கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளதாக மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தரம்பால் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.என்.ஐ’யிடம் பேசிய அவர், “சில காரணங்களால் மாநிலத்தின் அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் கணக்கெடுப்புக்கான கால அவகாசம் அக்டோபர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒவ்வொரு நிலையிலும் கணக்கெடுப்பு பணிகளை முடிக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பு தொடர்பாக அரசியல் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், சிறுபான்மை சமூகங்களின் குழந்தைகளுக்கு தரமான மற்றும் சிறந்த கல்வியை கருத்தில் கொண்டே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மேலும், மதரஸா மாணவர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, கல்வி வசதியை உறுதி செய்வது, மதரஸாக்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது” என விளக்கமளித்தார்.