சிதைக்கப்பட்ட தேசியக் கொடி

பாட்னா. பீகாரில் நபிகள் நாயகம் தின பேரணியில் மதரஸா அதிகாரிகள் தேசிய கொடியை அவமதித்தனர். பீகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் உள்ள கௌசியா பகுதியில் அமைந்துள்ள ஒரு மதரஸாவில் மிலாடி நபி கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், மூவர்ணக் கொடியை சிதைத்து பேரணியில் பயன்படுத்தியுள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரணியில் கலந்துகொண்ட மதரஸா மாணவர்கள், திட்டமிட்டு சிதைக்கப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியிருந்தனர். அந்த தேசியக் கொடியில் அசோக சக்கரம் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, வாள்களின் சின்னம் மற்றும் மத உரை எழுதப்பட்டு இருந்தது. சிதைக்கப்பட்ட தேசியகொடியை மாணவர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது. இதனையடுத்து காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளது.