இடதுசாரி பத்திரிகையாளரான ராணா அய்யூப் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ராணா அய்யூப் மீது அமலாக்கத்துறை, காசியாபாத் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதில், “மக்களுக்கு உதவுவதாக கூறி ‘கெட்டோ பிளாட்ஃபார்ம்’ மூலம் மூன்று நிதி திரட்டும் பிரச்சாரங்களை ராணா அய்யூப் தொடங்கினார். அதில் ரூ. 2.69 கோடி நிதி திரட்டினார். ஆன்லைன் தளங்களில் திரட்டப்பட்ட நிதி அவரது தந்தை, சகோதரியின் கணக்குகளில் பெறப்பட்டது. பின்னர் அவரது தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. பெறப்பட்ட இந்த நிதி, உண்மையில் அதற்கான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை. அதனை அவர் தனக்கென சொத்துக்களை உருவாக்கப் பயன்படுத்தினார். பெறப்பட்ட பணத்தில் 29 லட்சம் மட்டுமே நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. கணக்குகளுக்காக போலி பில்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 50 லட்சத்தை அவர் தனது பெயரில் வைப்புத்தொகையாக போட்டு வைத்தார். அவர் இந்த நிதியை வெள்ளைப் பணமாக காட்ட முயன்றார். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை மோசடி செய்துள்ளார். வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி (எப்.சி.ஆர்.ஏ) அவர் அரசிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறாமல் முறைகேடாக இந்த நிதியை வெளிநாடுகளில் இருந்து பெற்றார். பொது மக்களை ஏமாற்றும் ஒரே நோக்கத்துடன் மேற்கூறிய பிரச்சாரங்களைத் தொடங்கினார் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரியில், ராணா அய்யூப்பின் வங்கிக் கணக்குகளில் உள்ள ஒரு கோடியே 77 லட்ச ரூபாய் பணத்தை அமலாக்கத்துறை கண்டுபிடித்து முடக்கியது நினைவு கூரத்தக்கது.