அக்டோபர் 9 அன்று, டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஒரு நாடகத்தின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலானது, அதில் அவர்கள் சுதாமாவையும் பகவான் கிருஷ்ணனையும் குடிகாரர்களாக சித்தரித்து கேலி செய்திருந்தனர். குடிபோதையில் உள்ள சுதாமா, பகவான்கிருஷ்ணருக்கு மது அருந்த அளிப்பதாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இதற்கு மன்னிப்பு கோரியது. கல்லூரி ‘மதச்சார்பின்மையை’ நம்புகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்திய மாணவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ மன்னிப்புக் கடிதத்தை கோரியுள்ளோம். நிகழ்ச்சியில் பங்கேற்ற மஹவுல் மேக்கர்ஸ் குழு கலைக்கப்பட்டது. அவர்கள் இனி கல்லூரியி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கமும் மன்னிப்பு கோரியது. இதனிடையே இதுகுறித்து பேசிய எழுத்தாளர் அன்ஷுல் பாண்டே, “அவர்கள், மன்னிப்பு கேட்டால் மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா, மன்னிப்புக் கேட்ட பிறகு ஹிந்துக்களாகிய நாங்கள் ஒதுங்கிவிடுவோம் என்று அவர்கள் நினைக்கிறார்களா? இதுபோன்ற செயல்களுக்கு எதிராக நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்காததால், சனாதன தர்மத்தை இவர்கள் தொடர்ந்து கேலி செய்கிறார்கள். ஹிந்துக்களை கேலி செய்யும் இந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, எதிர்காலத்தில் அவர்கள் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிப்பது மட்டும் போதும் என்று நான் நம்பவில்லை. உண்மையைச் சொல்வதானால், மாணவர்களின் இந்த ஐ.பி.சி செயல் பிரிவு 295A இன் கீழ் வருகிறது. அவர்கள் ஹிந்து சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியிருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.முன்னதாக, மஹவுல் மேக்கர்ஸ் குழு உறுப்பினர்கள், கடந்த 2018லும் இதே ஸ்கிரிப்டை மேடையேற்றி ஹிந்து மதத்தை இழிவு செய்துள்ளனர். ஆனால், அப்போது இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் மீண்டும் அதே தவறை அரங்கேற்றியுள்ளனர் என்பது அவர்கள் பின்னணி குறித்து ஆய்வு செய்தபோது தெரியவந்துள்ளது.