மத்திய அரசுக்கு உலக வங்கி பாராட்டு

உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ், “ஏழ்மை மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட வளமை அறிக்கை” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர், “உலகளவில் ஏழ்மையை குறைத்துக்கொண்டிருக்கும் முயற்சிக்கு கொரோனா பெருந்தொற்று பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் பெருந்தொற்று இல்லாமல் இருந்ததால், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து தப்பித்து அடுத்தக் கட்டத்துக்கு நகர முடிந்தது. ஏழ்மை நாடுகளின் வருமானம் ஓரளவுக்கு உயர்ந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றின் வலியை அதிகமாக ஏழை மக்கள்தான் அனுபவித்தார்கள். பாரதத்தை ஆளும் மத்திய அரசு, பாரத அரசு மக்களுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்தது பெருமளவு உதவியது. உலகநாடுகள் மானியத்தை கைவிட்டு, பாரதத்தின் இந்த நேரடிப் பணப்பரிமாற்ற உதவியை பின்பற்ற வேண்டும். மக்களுக்கு உணவு அல்லது நேரடியாகப் பணத்தை வழங்கி ஆதரவு கொடுத்தது. இதனால் கிராமப்புறங்களில் 85 சதவீதம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 69 சதவீத வீடுகளும் பயன் அடைந்தன. ஏழைகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பணத்தை சேர்த்த மத்திய அரசின் அரசின் திட்டம் சிறப்பானது. நேரடியாகப் பணம் அளிக்கும் திட்டத்தில் 60 சதவீதப் பணம் சமூகத்தில் ஏழ்மையில் உள்ள 40 சதவீத மக்களுக்கு சென்றடைந்தது. மானியத்தைவிட, பணத்தை நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தென் ஆப்பிரி்க்காவும் இதேபோன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்து 600 கோடி டாலரை ஏழை மக்கள் நிவாரணத்துக்காக வழங்கியது, இதன் மூலம் 2.90 கோடி மக்கள் பயன் அடைந்தார்கள். பிரேசில் நாடும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் பணம் வழங்கி ஏழ்மை நிலையைக் குறைத்தது. கடந்த பல ஆண்டுகளாக அடைந்த வளர்ச்சியை கொரோனா பெருந்தொற்று வாரிச்சுருட்டிச் சென்றது. கல்வி, ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்களில் இனிமேல் முதலீடு செய்வது அவசியம். அடுத்தகட்ட பேரிடர்கள், சிக்கல்களுக்கு முன்பாகவே அரசுகள் தயாராக வேண்டும்” என தெரிவித்தார்.