மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் உல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் ஹேக் ஜமில் உர் ரஹ்மான், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி அமைப்பின் தலைவர் பிலால் அகமது பெய்க் ஆகியோர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஹர்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி அமைப்பின் கமாண்டர் ஜாஃபர் இக்பால், அவருடன் இணைந்து செயல்பட்டு வரும் ரஃபிக் நய், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஹபிபுல்லா மாலிக், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது காண்டூ, ஷவுகத் அகமத் ஷேக், பசித் அகமது ரெஷி, பஷிர் அகமது பீர், இர்ஷத் அகமது ஆகியோரும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹஃபிஸ் சையத் உள்ளிட்ட 38 பேர் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்த எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.