தூண்டப்படும் மதமோதல்

குஜராத் மாநிலம் வதோதராவின் சால்வியில் மத பிரச்சனையில் அப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டனர். நவராத்திரியை முன்னிட்டு தாமாஜி நா தேரா என்ற ஹிந்துக் கோயிலுக்கு அருகே உள்ள கம்பங்களில் ஹிந்து கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இந்த கம்பங்களில் சில முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமென்றே இஸ்லாமியக் கொடிகளை கட்டினர். அங்கிருந்த ஹிந்துக்கள் குழு ஒன்று அவர்களை அணுகி, இஸ்லாமியக் கொடிகளை இங்கு வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. இதையடுத்து, அங்கு சுமார் 100 பேர் அந்த இடத்தில் திரண்டு வகுப்புவாத மோதலில் ஈடுபட்டனர். கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை அந்த கும்பல் பயன்படுத்தியது. இந்த மோதலின் போது தனியார் வாகனங்கள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறையினர் வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இரு தரப்பிலும் உள்ள சுமார் 46 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.