கலவரங்களுக்கு தயாராகிறதா பி.எப்.ஐ?

பி.எப்.ஐ மீது மத்திய அரசு தடை விதித்ததை அடுத்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில மற்றும் மத்திய காவல் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பி.எப்.ஐ மற்றும் அதன் மாணவர்களின் பிரிவான சி.எப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளின் பல்வேறு சமூக ஊடக கணக்குகளில் அவற்றின் சுயவிவரப் பெயர்கள் இன்டிஃபடா (Intifada) என மாற்றப்பட்டுள்ளன.

அது என்ன இன்டிஃபடா? என கேட்டதில், இன்டிஃபடா என்பது ஒரு அரசு அல்லது ஆட்சிக்கு எதிராக ஜிஹாதிகளால் தொடங்கப்பட்ட பயங்கர கலவரங்கள் மற்றும் வன்முறைகளின் தொடர் என கூறுகின்றனர். விக்கிபீடியாவின் படி, இன்டிஃபடா (அரபு: انتفاضةintifāḍah) என்பது ஒரு கிளர்ச்சி அல்லது எழுச்சி அல்லது எதிர்ப்பு இயக்கம். இது சமகால அரபு பயன்பாட்டில் அடக்குமுறைக்கு எதிரான சட்டபூர்வமான எழுச்சியைக் குறிப்பிடும் ஒரு முக்கிய கருத்தாகும்.1952ம் ஆண்டு எகிப்தியப் புரட்சியின் உத்வேகத்துடன், சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஹாஷிமைட் முடியாட்சியை எதிர்த்து தெருக்களில் இறங்கியபோது, 1952ல் ஈராக்கில் நவீன காலத்தில் இன்டிஃபடா என்ற கருத்து முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.

எனவே, தடைசெய்யப்பட்ட இந்த பி.எப்.ஐ அமைப்பின் திடீர் சமூக ஊடக சுயவிவர பெயர் மாற்றம், அது நாடு முழுவதும் பரவலான வன்முறை மற்றும் கலவரங்களுக்கு தயாராகி வருவதற்கான ஊகங்களை மக்களிடம் தூண்டியுள்ளது. முன்னதாக, பி.எப்.ஐ கேரள மாநில பிரிவு அதன் தலைவர்கள் மீதான சோதனைகள் மற்றும் கைதுகளுக்கு எதிராக செப்டம்பர் 23 அன்று மாநிலம் தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்போது, மாநிலம் முழுவதும் பரவலாக வன்முறைகள் அவர்களால் நிகழ்த்தபட்டது. கல் வீச்சு மற்றும் பெட்ரோல் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதேபோல, தமிழகத்திலும் வன்முறைகளை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது.