திசை திருப்பும் முயற்சி?

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில், ஹிந்து இயக்க பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் நிறுவனங்களில், பெட்ரோல் குண்டு வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சேர்ந்தவர்களையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த, 26ம் தேதி நள்ளிரவு, மேட்டுப்பாளையம் இந்து இளைஞர் முன்னணி நகர ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ் கார் மீது கல் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரில் ஒருவர் இந்து முன்னணி உறுப்பினர் என்று உண்மைக்கு புறம்பான தகவலை கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம், சமீபத்தில், பி.எப்.ஐ அமைப்பை தடை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை திசை திருப்பும் முயற்சியாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என கூறியுள்ளார்.