எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயர்ந்து வரும் வட்டி விகிதங்கள், அதிகரித்து வரும் ஐரோப்பிய எரிசக்தி பிரச்சனை, உலக பொருளாதார சூழல் ஆகியவை, ஒவ்வொரு நாட்டிலும் அதன் வளர்ச்சி மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டில், 7.3 சதவீத வளர்ச்சியுடன், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில், பாரதம் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிகிறது. சீனாவை தவிர்த்த 16 வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் அவற்றின் வளர்ச்சி நடப்பு ஆண்டில் 5.2 சதவீதத்தை எட்டும். ஆனால் பாரதம், 7.3 சதவீத வளர்ச்சியுடன் நட்சத்திரமாக இருக்கும். அமெரிக்காவை பொறுத்தவரை, சிறிய அளவிலான பொருளாதார மந்தநிலைய எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.