வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன், தமிழக காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தமிழக அரசிடம், தான் குயவர் சமுதாய மக்கள் சார்பாக சமூக பிரதி நிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளதால் கடந்த 23ம் தேதி சென்னையில் உள்ள தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வீட்டிற்கு அவரை காண அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு அமைச்சர் எங்கள் யாரையும் நாற்காலியில் அமர வைக்காமல் நிற்கவைத்தே பேசினார். மனுவை விளக்க அருகில் சென்றபோது, அருகில் வரவிடாமல் தள்ளி நின்று பேசும்படி கூறினார். மரியாதை தராமல் ஒருமையில் பேசினார். எனவே வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.