பி.எப்.ஐ’யின் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்

என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் பி.எப்.ஐ மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் இடங்களில் நாடு முழுவதும் நடத்திய சோதனைகள் மற்றும் கைதுகளை கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே பி.எப்.ஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதில் அவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கங்களை எழுப்பினர். இத்தகைய முழக்கங்களுக்கு மக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, இது அவர்களின் நாட்டுப்பற்று எத்தகையது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக கூறியுள்ளனர். போராட்டக்காரர்கள் சிலரை புனே காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதனிடையே, பி.எப்.ஐ அமைப்பினரின் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆர்.ஜே.டி) மூத்த தலைவர் திவாரி, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷங்களை எழுப்புவதால், போராட்டம் நடத்துபவர்கள் பாகிஸ்தானியர்களாக மாறி பாகிஸ்தானுக்குச் செல்வார்கள் என்று அர்த்தமல்ல. இதுபோன்ற கோஷங்கள் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.