நில ஜிஹாத்தில் அசோகர் கல்வெட்டு

பீகாரின் சாசரத்தில் உள்ள 2,300 ஆண்டுகள் பழமையான அசோகரின் கல்வெட்டு தற்போது முஸ்லிம்களின்  நில ஜிஹாதின் உதாரணமாக மாறியுள்ளது. கைமூர் மலைத்தொடரின் சந்தன் மலையில் உள்ள ஒரு இயற்கை குகையில் அசோகரின் இந்த கல்வெட்டு ஆணை பொறிக்கப்பட்டுள்ளது. இது ரோஹ்தாஸ் மாவட்டத்தின் தலைமையகமான சசாரத்தில் அமைந்துள்ளது. இது நாட்டில் உள்ள அசோகரின் எட்டு ஆணைகளில் ஒன்றாகும். இவை பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள ஒரே ஒரு அசோகரின் கல்வெட்டு இதுதான். இந்த கல்வெட்டை சுற்றிலும் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த அரிய கல்வெட்டு மீது வெள்ளை சுண்ணாம்பு பூசி அதன் மேல் பச்சை துணியால் மூடி அதனை இப்போது ஒரு தர்காவாக அவர்கள் மாற்றிவிட்டனர். ஒரு சூஃபி துறவியின் கல்லறை இது என்று அறிவித்து ஆண்டுதோறும் உர்ஸ் திருவிழாவும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சட்டவிரோத கட்டுமானத்தைத் தொடர்ந்து நினைவுச்சின்னத்தின் வாயிலையும் அவர்கள் மூடிவிட்டனர். இந்திய தொல்லியல் துறை 2008ல் இதனை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்தது. கல்வெட்டுக்கு அருகில் தொல்லியல் துறை அமைத்த பாதுகாப்பு பலகையையும் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றிவிட்டனர். 2012 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியருக்கு தொல்லியல்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த அந்த சட்டவிரோத ஆக்கிரப்பு கட்டடத்தை இடித்துவிட்டு இடத்தை உடனடியாக நிர்வாகத்திடம் ஒப்படைக்க அதனை கட்டிய முஹர்ரம் கமிட்டிக்கு கூறப்பட்டது. ஆனால், இதுவரை அவர்கள் அதனை ஏற்க மறுத்து ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.