334 சதவீதம் வளர்ச்சி

மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பர் பாரத் உள்ளிட்ட சீர்மிகு திட்டங்கள் மூலம் பாரதத்தின் ஆயுத ஏற்றுமதி பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அவ்வகையில், கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உபகரணங்கள் மற்றும் ஆயுத ஏற்றுமதியின் அளவு யடைந்துள்ளது. இது பாரதத்தின் புதிய சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பாரதம் தற்போது 75 நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதிகளை செய்து வருவதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாரத பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார், பாதுகாப்புத் துறையில் ஒட்டுமொத்தமாக மேக் இன் இந்தியா முயற்சிகளின் முழுமையான ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மோடி அரசின் அம்ரித் கால் திட்டத்தின் முக்கியப் பகுதியாக பாரதம் விரைவில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் என்றும் கூறினார்.