கர்நாடகாவில் ஸ்ரீதர் கங்காதர் என்ற பட்டியலின இளைஞருக்கு வலுக்கட்டாயமாக விருத்தசேதனம் செய்யப்பட்டு முகமது சல்மான் என பெயர் மாற்றப்பட்டு மாட்டிறைச்சி சாப்பிட வைக்கப்பட்டுள்ளது. அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாண்டியாவில் மதரசாக்களை நோக்கி சில ஸ்ரீராம் சேனா என்ற ஹிந்து அமைப்பினர் பேரணி நடத்தியதால் பதற்றம் அதிகரித்தது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஹிந்து அமைப்புகளுக்கு கர்நாடக காவல்துறையினர் உறுதி அளித்து கலைந்துபோக செய்தனர். இதுகுறித்த புகாரில், முஸ்லிம் மதமாற்றத்தின் ஒரு பகுதியாக கடந்த மே மாதம் முதல் பலவந்தமாக மசூதிக்கு அழைத்து வரப்பட்ட கங்காதருக்கு திருப்பதியில் உள்ள ஒரு மசூதியில் அவருக்கு குரான் கற்றுக்கொடுத்து, வலுக்கட்டாயமாக அவரது கைகளில் துப்பாக்கி கொடுத்து அதனை வைத்திருப்பதை புகைப்படம் எடுத்தனர். தங்கள் கணக்கில் 35,000 ரூபாய் டெபாசிட் செய்யும்படி அவரை வற்புறுத்தியுள்ளனர். ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்தினர். ஒரு வருடத்திற்கு குறைந்தது மூன்று ஹிந்துக்களையாவது முஸ்லீம் மதத்திற்கு மாற்றுமாறு நிர்பந்தித்தனர். அப்படி ஹிந்துக்களை மதம் மாற்றத் தவறினால், போலி வழக்குகள் போடப்படும் என மிரட்டினர் என புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில், மாண்டியாவைச் சேர்ந்த அத்தவர் ரஹ்மான், பெங்களூருவைச் சேர்ந்த அசீசப், நயாஸ் பாஷா, நதீம் கான், அன்சார் பாஷா, சையத் தஸ்தகிர், முகமது இக்பால், ரபீக், ஷபீர், காலித், ஷகீல், அல்தாப் என்ற 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.