இதுதானா கம்யூனிச மாடல்?

கேரள லாட்டரியில் சமீபத்தில் 25 கோடி ரூபாய் பரிசு பெற்ற அனூப் என்பவர், தன்னிடம் பலரும் பணம் கேட்டு தொல்லை செய்வதாகவும் சிலர் பணம் கேட்டு மிரட்டவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதனால் தான் தலைமறைவாக உள்ளதாகவும் இதனால் தனது இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் மனஉளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சூழலில்,கேரள மாநிலம் பெருநாடு பகுதியை சேர்ந்த பாபு என்பவர் சமீபத்தில் தற்கொலை செய்திக்கொண்டார். அவரது தற்கொலைக் குறித்து பேசியுள்ள அவரது குடும்பத்தினர், பல ஆண்டுகளுக்கு முன், ஒரு சில நிலங்களை பஞ்சாயத்துக்கு கொட்டகை கட்ட தானம் செய்தார் பாபு. ஆனால், மீண்டும் கொட்டகை கட்டுவதற்காக 2.25 சென்ட் நிலம் கேட்டு பெருநாடு பஞ்சாயத்து அவரை அணுகியது. சர்வேயரை அழைத்து அவரது அனுமதியின்றி நிலத்தை அளவீடு செய்தனர். பெருநாடு ஊராட்சித் தலைவரும், ஆளும் சி.பி.எம் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான பி.எஸ்.மோகனன், சி.பி.எம் உள்ளூர்ச் செயலர் ராபின், கிராம பஞ்சாயத்து உறுப்பினர் விஸ்வம் ஆகியோர் பாபுவை மிரட்டினர். இதனால், மோகனனுக்கு ரூ.3 லட்சமும், ராபின் மற்றும் விஸ்வத்துக்கு தலா ரூ.1 லட்சமும் கொடுத்துள்ளார் பாபு. மேலும் ஒரு பெரிய தொகையை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்ய இந்த சி.பி.எம் தலைவர்கள் பாபுவை வற்புறுத்தினர். அப்பகுதியில் காத்திருப்பு கொட்டகை அமைக்க நிலத்தை தானமாக தருமாறு மிரட்டினர். இதனால் இதுகுறித்து விளக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் பாபு என கூறியுள்ளனர். காவல்துறை இவ்வழக்கை விசாரித்து வருகிறது. வழக்கம் போல சி.பி.எம் தலைவர்கள் தங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.