பீகார் மாநிலம் ஜலால்பூர் மாவட்டம் சாப்ரா பகுதியிலுள்ள பட்கேசரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹிந்து மாணவர் ஆதித்ய திவாரி. இவர், ஜலால்பூர் பகுதியிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது டியூஷனுக்கு படிக்க வரும் மாணவிகளை அப்பகுதியில் உள்ள தைஃப் என்கிற சோனுகான், ஷஹீல், அர்ஷாத் ஆகிய முஸ்லிம் நபர்கள் கேலி, கிண்டல் செய்து வந்தனர். இதை ஆதித்ய திவாரி தட்டிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும், மாணவிகள் முன்னிலையிலேயே ஆதித்யாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டிச் சென்றனர். மறுநாள் பள்ளியில் நடைபெற்ற பருவத்தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த ஆதித்ய திவாரியை சோனுகான், ஷஹீல், அர்ஷாத் ஆகியோர் தங்களது நண்பர்களான அர்பாஸ், முகமது குடு, அலி ஆகியோருடன் இணைந்து கொடூரமாகத் தாக்கியதோடு, மார்பு, வயிறுப் பகுதிகளில் கத்தியால் சரமாரியாகக் குத்தினர். ஆசிரியர்கள் மாணவர்கள் ஆதித்ய திவாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆதித்யா இறந்து விட்டதாகக் கூறினர். ஆதித்யா கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் தெரியவந்ததையடுத்து பள்ளி முன்பு திரண்ட மக்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகின்றனர்.