கேரள காவல்துறை அதிர்ச்சித் தகவல்

24 மணி நேர அறிவிப்பில் வடக்கு கேரளாவில் உள்ள ஒவ்வொரு ஆர்.எஸ்எ.ஸ் மற்றும் பா.ஜ.க உறுப்பினர்களை படுகொலை செய்ததற்காக அவர்களின் வீடுகள், வழிகள், மற்றும் சுற்றுப்புறங்களின் விரிவான வரைபடங்கள் மற்றும் புகைப்படங்களை பி.எப்.ஐ தயாரித்து வைத்துள்ளது என கேரள காவல்துறை கூறியுள்ளது. மேலும், பி.எப்.ஐ இதற்காக தனது ஆட்களை நியமித்துள்ளது. அவர்கள் தங்கள் இலக்குகள் வசிக்கும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க உறுப்பினர்களின் வீடுகளுக்கு எளிதான வழியை வரைபடமாக தயாரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் சஞ்சித்தை கொன்ற பாப்புலர் பிரண்ட் இந்தியா உறுப்பினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் இருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது. சஞ்சித்தை கொன்ற பிறகு அவரது சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆட்டோவையும் பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் வீடியோ எடுத்ததற்கான ஆதாரம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் கொலைகளுக்கு சாட்சியாக இருந்தவர்களின் புகைப்படங்கள் ஆகியவையும் அந்த பென் டிரைவில் இருந்தன என கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் மீதான என்.ஐ.ஏ சோதனைகளுக்குப் பிறகு அவர்கள் நடத்திய வன்முறைகளை கேரள உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும் இதனை பி.எப்.ஐ தான் செய்தது என ஒப்புக்கொண்டு கண்டித்துள்ளார். ஆனால், கேரளாவின் ஒரே ஒரு சி.பி.எம் எம்.பியான ஆலப்புழாவை சேர்ந்த ஏ.எம். ஆரிஃப், பி.எப்.ஐ தலைவர்கள் மீதான என்.ஐ.ஏ சோதனைகளுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். பாப்புலர் பிரண்ட் அமைப்பினரை கைது செய்தது ஒருதலைபட்சமான நடவடிக்கை என கூறியுள்ளார். இந்த அறிக்கை பி.எப்.ஐக்கு சி.பி.எம் கட்சியின் ஆதரவின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆரிப் மற்றும் அம்பலப்புழா எம்.எல்.ஏ ஹெச். சலாம் ஆகியோர் பி.எப்.ஐ பினாமிகள் என்று அம்மாநிலத்தில் குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.