ஆசிக்கிற்கு ஆபாச போட்டோ

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் என்ற முஸ்லிம் நபர் மருத்துவராக உள்ளார். முஸ்லிம் பஜார் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. எனினும், இவருக்கும் காளீஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காளீஸ்வரி தற்போது மதுரை, அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி கல்லுாரியில் பி.எட் படித்து வருகிறார். டாக்டர் ஆசிக்குடன் இவருக்கு பல ஆண்டுகளாக தொடர்புள்ள நிலையில், தன் விடுதியில் தங்கியுள்ள சக பெண்களின் குளியல் மற்றும் உடை மாற்றும் காட்சிகளை போட்டோ, வீடியோ எடுத்து ஆசிக்கிற்கு அனுப்பி வந்துள்ளார். இவர் ரகசியமாக போட்டோ, வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்புவதை பார்த்த பெண் ஒருவர், விடுதிகாப்பாளரிடம் புகார் அளித்தார். அவர், காளீஸ்வரி அலைபேசியை சோதித்தபோது, ஆபாச போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ‘சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் இதுபோல நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை ஆசிக்கிற்கு அவர் அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதன் பின்னணியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.