நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த அமைப்பைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டனர். ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் கல்விப் பிரிவுக்கான தேசிய பொறுப்பாளர் கரமனா அஸ்ரஃப் மவுல்வி உள்ளிட்டோரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கேரள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு என்.ஐ.ஏ’வின் கொச்சி பிரிவு அளித்துள்ள பதில் மனுவில், பி.எப்.ஐ அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் கேரளாவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மதங்களுக்கு இடையேயும் மதக் குழுக்களுக்கு இடையேயும் பகைமையை உருவாக்குவது, நாட்டுக்கு எதிராக நச்சுக் கருத்துகளை பரப்புவது, நீதித் துறைக்கு மாற்றான நீதிமுறையை வலியுறுத்துவது, வன்முறையை நியாயப்படுத்துவது, பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்குவது, லஷ்கர் இ தொய்பா, ஐ.எஸ்.ஐ.எஸ், அல் காய்தா ஆகிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் இணைந்து செயல்பட இளைஞர்களை ஊக்குவிப்பது, ஜிகாத் எனப்படும் இஸ்லாத்திற்கான போரின் ஒரு பகுதியாக பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் பாரதத்தில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றங்களில் பி.எப்.ஐ அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.