நாடு முழுவதும் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ சமப்ந்தப்பட்டவர்கள் இடங்களில் சமீபத்தில் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை இணைந்து சோதனை நடத்தின. பலர் கைது செய்யப்பட்டார். பயங்கர ஆயுதங்கள், அவர்களால் குறி வைக்கப்பட்ட ஹிந்து அமைப்பினர் குறித்த தகவல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்கள் போன்றவை சோதனையில் கைப்பற்றப்பட்டன. இந்த சூழலில், தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ராமநாதபுரம், மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் பிரமுகர் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால், தமிழகமெங்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இது தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது, பயங்கரவாதிகள் எவ்வளவு சுதந்திரமாக உலவுகின்றனர் என்பதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இதையடுத்து ஹிந்து அமைப்பு அலுவலகங்கல், பா.ஜ.க அலுவலகம், முக்கிய இடங்களில் காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த பயங்கரவாத சம்பவத்தின்போது பிடிபட்ட இப்ராஹிம், தீனுல் ஆசிப், ஆரிஸ், ஜபருல்லா என சிலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர், குற்றச்செயலில் ஈடுபடுவோர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். இவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுவரை 250 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. கோவையில் கூடுதலாக 3,500 போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சில அமைப்பை சேர்ந்தோர், வீடு, கார் மீது கல் வீசியது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.