கேரள அரசு காரணம் கூற வேண்டும்

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரளாவை ஆளும் இடதுசாரிகள் தலைமையிலான அரசு, மாவோயிஸ்ட் பயங்கரவாத குழுவின் தலைவர் ரூபேஷ் மீதான ‘உபா’ அடிப்படையிலான குற்றச்சாட்டை திரும்பப் பெற உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை திரும்பப் பெற்றதற்கான காரணத்தை விளக்குமாறு கேரள அரசிடம் கேட்டதுடன் காரணம் சரியானதாக இருந்தால் மட்டுமே மனுவை விசாரணைக்கு அனுமதிக்க முடியும் என்று கூறியது. முன்னதாக, கேரள மாநிலம், வளையம் மற்றும் குட்டியாடி காவல் நிலையங்களில், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக ரூபேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ‘உபா’ குற்றச்சாட்டுகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வெறும் தொழில்நுட்ப காரணங்களை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ததாகவும், காரணம் தெரியாவிட்டால் வாபஸ் மனுவை அனுமதிக்க முடியாது என்றும் கூறியது.