ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு தவறா?

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ​​சமீபத்தில் திருச்சூருக்கு வந்தபோது அவரை சந்தித்து ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், “ஆர்.எஸ்.எஸ் உடன் எனக்கு சமீபத்தில் ஒன்றும் தொடர்பு ஏற்படவில்லை, 1986ம் ஆண்டு ஷா பானோ வழக்கில் ஆர்.எஸ்.எஸ் என்னை ஆதரித்தபொழுதில் இருந்தே ஆர்.எஸ்எ.ஸ் உடனான எனது உறவு தொடங்கியது. கடந்த 17ம் தேதி நான் திருச்சூரில் இருந்தபோது, ​​மோகன் பாகவத் அங்கு இருப்பதை அறிந்தேன். அவரைச் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றேன். அவர் மீண்டும் இங்கு வந்தால், நான் மீண்டும் அவரைச் சென்று சந்திப்பேன். பாரதத்தில் தோன்றாத ஒரு சித்தாந்தத்திற்கு விசுவாசமாக இருக்க உங்களுக்கு உரிமை இருக்குமானால், ஆர்.எஸ்.எஸ் உடன் நட்பு கொள்ள எனக்கு உரிமை இல்லையா? சித்தாந்தம் பிரச்சனையல்ல. பிரச்சனை என்பது அந்த சித்தாந்தத்தில் இருந்து உருவான செயல். நாட்டில் உள்ள பல்வேறு ராஜ்பவன்களில் வெளிப்படையாகவும் அதிகாரப்பூர்வமாகவும் ஆர்.எஸ்.ஸ் உடன் இணைந்தவர்கள் உள்ளனர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூட ஸ்வயம்சேவகர் தான். ஒருமுறை ஜவஹர்லால் நேரு கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை குடியரசு தின அணிவகுப்புக்கு அழைத்துள்ளார். எனவே நான் இப்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்ததில் என்ன பிரச்சனை? ஆர்.எஸ்.எஸ் என்ன தடை செய்யப்பட்ட அமைப்பா? என கேள்வி எழுப்பினார்.