தி.மு.க’வுக்கு முழுக்கு

தி.மு.க’வின் மூத்தத் தலைவரும் தி.மு.க துணை பொது செயலாலரும் முன்னாள் எம்.பியுமான சுப்புலட்சுமி ஜெகதீசன், தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2009ல் எனது எம்.பி பதவி முடிந்ததும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சி பணியை மட்டும் தொடர்வதாக அப்போதைய தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்தேன். தொடர்ந்து 2021 தேர்தலில் பணியாற்றி முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்த மனநிறைவோடு நான் எனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றி கட்சி பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். தன் மனைவிக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்ததால் கடுப்பில் இருந்த சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், சமீபகாலமாக தி.மு.க.,வையும், கட்சி தலைமையையும் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் எழுதி வந்தார். இதற்கு சுப்புலட்சுமி தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.