சில நாட்களுக்கு முன் நமீபியாவில் இருந்து பாரதத்துக்கு வந்த சிறுத்தைகளை இடமாற்றம் செய்யும் பணியை ஒருங்கிணைத்த சிறுத்தைகள் பாதுகாப்பு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் லாரி மார்க்கர், “பாரதத்தில் மேலும் அதிகமான சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக பாரதம் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவுடன் இணைந்து செயல்படுகிறது. நமீபியா இன்னும் சில ஆண்டுகளில் மேலும் பல சிறுத்தைகளை பாரதம் அனுப்பும். சிறுத்தையைக் காப்பாற்றுவது என்பது உலகை மாற்றுவதாகும். சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரத மண்ணைத் தொடும் சிறுத்தையுடன் இந்த செயல்முறையைத் தொடங்கியுள்ளோம். அவற்றின் அழிவு மனிதனால் ஏற்பட்டது. அவற்றின் வாழ்வும் மனிதர்களின் கைகளில் தான் உள்ளது. அவை நமது வாழ்க்கை வட்டத்தில் ஒரு இணைப்பு சங்கிலி. இன்றைய நமது பூமியின் பாதிப்புகள் நமது அற்புதமான வனவிலங்கு இனங்களை அழிப்பதால் அதிகரிக்கின்றன. நாம் விழிப்புடன் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவது நம் அனைவரின் கைகளில்தான் உள்ளது. பூமியையும், நம்மையும், சிறுத்தையையும் நம்மால் மட்டுமே காப்பாற்ற முடியும். சிறுத்தைகள் தங்களை தகவமைத்துக் கொள்ளக்கூடியவை. பாரதத்தில் ஏற்கனவே அவை வாழ்ந்துள்ளன. எனவே பாரதத்தில் அவை எளிதில் வாழும்” என தெரிவித்தார்.