முன்னாள் ஐ.ஏஎ.ஸ் அதிகாரியும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளருமான தீபக் குமார் கோஷ், எழுதிய ‘Mamata Banerjee – As I have known her or the Goddess that failed’ புத்தகத்தில் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் சில இருண்ட ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார். 16 ஆண்டுகளுக்கு முன்பு, டாடா நிறுவனத்தின் நேனோ கார் தொழிற்சாலைக்காக அப்போதைய இடதுசாரி அரசு, சிங்கூரில் விவசாய நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதை எதிர்த்து கொல்கத்தாவில் 26 நாள் நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். இது மமதா பானர்ஜியின் அரசியல் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், இது குறித்து தனது புத்தகத்தின் 8வது அத்யாயத்தில் விவரித்துள்ள கோஷ், 2006ல் மமதா பானர்ஜி தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சிக்கன், காய்கறி சாண்ட்விச்கள், மீன் மற்றும் சாக்லேட்டுகளை சாப்பிட்டார். தன் தலையணைக்கு அடியில் ஏராளமான வெளிநாட்டு சாக்லேட்டுகளை மறைத்து வைத்திருந்தார். மம்தா பானர்ஜி தனது உண்ணாவிரதத்தின் முதல் 3 நாட்களுக்கு எலுமிச்சை மற்றும் குளுக்கோஸ் தண்ணீரை மட்டுமே குடித்தார். ஆனால் அதன் பிறகு, அவரது தனிப்பட்ட உதவியாளர் கெளதம் பாசு மூலம் போராட்ட தளத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை சாபிட்டார். இரவு உணவிற்கு சாண்ட்விச்கள் மற்றும் மீன்களையும் பகலில் சாக்லேட்டுகளையும் அவர் புத்திசாலித்தனமாக சாப்பிட்டார். டெரெக் ஓ பிரையன் அவற்றை ரகசியமாக கொடுத்தனுப்பினார் என கூறியுள்ளார். கருணாநிதியின் 6 மணி நேர கின்னஸ் சாதனை உண்ணாவிரதத்தையே பார்த்த எங்களுக்கு இது எல்லாம் எம்மாத்திரம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.