ஹிந்துத்துவா என்பது தெய்வீக குணம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், கேரள மாநிலம் குருவாயூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பூர்ண கணவேஷ் சாங்கிக்கில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “ஹிந்துத்துவா என்பது வளமான மற்றும் தெய்வீக குணத்திற்கான பெயர். இது எந்த இனம், ஜாதி, மதம், மொழி அல்லது மதத்தின் பெயர் அல்ல. இது முழுவதையும் தழுவிய ஒரு தத்துவம். பாரதத்தின் பரம வைபவத்தை அடையவும், அதனை விஸ்வ குருவாக மாற்றவும் சமூகத்தை வலுப்படுத்துவதிலும் சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அடுத்த 25 வருடங்களில் பாரதம் தனது மகிமையின் உச்சத்தை எட்டும். அதற்கு ஹிந்து தர்மம் சக்தி வாய்ந்ததாக மாற வேண்டும். சக்தி வாய்ந்தவர்களை மட்டுமே உலகம் மதிக்கிறது. இவ்வுலகின் நன்மைக்காக நாம் உழைக்க வேண்டும் என்றால், சமுதாயம் வலுவாக இருக்க வேண்டும். பேய் குணம் கொண்ட மனிதர்களுக்கு அறிவு என்பது சர்ச்சையை உருவாக்குவதற்கும் அவர்களின்  ஆணவத்திற்கும், பணம் சம்பாதிக்கவும் மற்றவர்களைத் தாக்கும் வலிமை பெறுவதேயாகும். இது அழிவுகரமானது. ஹிந்துத்துவா என்பது நீர் நிறைந்த, பழங்கள் நிறைந்த, இனிமையான, அமைதியான மற்றும் குளிர்ச்சியான இயற்கையின் தாயின் மரபாகும்” என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென் பாரத தலைவர் டாக்டர் ஏ.ஆர். வன்னிராஜன், மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கே.கே. பலராம், மா நில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், டாக்டர் மோகன் பாகவத், ஐ.ஐ.எம் கோழிக்கோடு இயக்குநர் டாக்டர் தேபாஷிஷ் சாட்டர்ஜி எழுதிய கிருஷ்ணா, ஏழாவது அறிவு மற்றும் பிரபல ஆயுர்வேத மருத்துவர் பி.கே தர்மபாலன் எழுதிய ஆயுர்வேதத்தில் மருத்துவ முறைகளில் பிரயோகிகா கிராந்தா ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.