அஸ்ஸாம் அரசு காட்டும் வழி

அஸ்ஸாமில் கடந்த செப்டம்பர் 6 அன்று உலகம் ஒரு அரிய காட்சியை கண்டது. முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களைக்கொண்ட அல்கா கிராமத்தில் உள்ள மதரஸாவை அப்பகுதி முஸ்லிம்களே இடித்துத் தள்ளினர். இந்தச்செயல் ஒருமாறுபாடு அல்ல. மாறாக மாநிலத்தில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாத முஸ்லீம்களை ஒடுக்குவதற்கு அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் தலைமையில் மாநில அரசு எடுத்த ஆக்கபூர்வமான தொடர் நடவடிக்கைகளின் தொடர் விளைவு இது.

இத்தகைய மதரசாக்கள் மூலம் பல உள்ளூர் இளைஞர்களை அமைதியாக பயங்கரவாதிகளாக மாறிக் கொண்டிருந்தனர். முன்னதாக, மாநிலத்தில் தொடர்ச்சியான பல முஸ்லிம் பயங்கரவாத குழுக்களின் சதி முறியடிக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் தொடக்கத்தில் அஸ்ஸாம், முஸ்லிம் அடிப்படைவாதத்தின் மையமாக மாறி வருவது குறித்து சர்மா எச்சரிக்கை விடுத்தார். மாநிலத்தில் உள்ள பல மதரஸாக்கள் பயங்கரவாத மையங்களாகவும், தீவிர இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் கேந்திரங்களாகவும் மாறிவிட்டதாகக் கூறினார்.

கடந்த சில மாதங்களில், வங்கதேசத்தை சேர்ந்த அன்சருல்லா பங்களா (ஏ.பி.டி) என்ற பயங்கரவாத அமைப்பு மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் அல்கொய்தாவின் முன்னணி (ஏ.கியு.ஐ.எஸ்) அமைப்புகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஜிஹாதிகள் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் இருந்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெரும்பாலான பயங்கரவாதிகள் மசூதிகளில் இமாம்களாகவும் மதரஸாக்களில் ஆசிரியர்களாகவும் பணியாற்றி வந்தனர். அவர்களில் பலர் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பாரதத்துக்குள் ஊடுருவியவர்கள்.

முதல்வர் சர்மா, பயங்கரவாதிகளை ஒடுக்க உத்தரவிட்டார். மசூதிகள், மதரஸாக்கள், இமாம்கள் மற்றும் ஆசிரியர்கள்மீது கண்காணிப்பை அதிகரிக்குமாறு காவல்துறையைக் கேட்டுக்கொண்டார். இன்னும் சொல்லப்போனால், உண்மையில், ஜூன் 2021ல் அவர் முதல்வராகப் பதவியேற்ற உடனேயே, முஸ்லிம் பயங்கரவாதத்தை வேரறுப்பதிலும் பயங்கரவாதத் தொகுதிகளை முறியடிப்பதிலும் கவனம் செலுத்தினார்.

அவர் முதல்வராக பொறுப்பேற்றவுடன் செய்த முதல் செயல்களில் ஒன்று, மாநிலத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட அரசு நடத்தும் மதரஸாக்களை மூட உத்தரவிட்டது. அவற்றை வழக்கமான பள்ளிகளாக மாற்றினார். நவீன கல்வியை வழங்க உத்தரவிட்டார்.

‘மாணவர்களின் இளம் மனங்கள் பெரும்பாலும் மதரஸாக்களால் தீவிரமயமாக்கப்பட்டு வருகின்றன என்பது உலகறிந்த உண்மை. பயங்கரவாதத்தின் மூலத்தை சமாளிக்க, மதரஸாக்களையும் அங்கு என்ன கற்பிக்கப்படுகிறது, ஆசிரியர்கள் யார், மதரஸாக்களில் என்ன மாதிரியான செயல்பாடுகள் நடக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு மதச்சார்பற்ற தேசத்தில், எந்த அரசும் யாருக்கும் மதக்கல்வியை வழங்கும் எந்த வியாபாரத்தையும் செய்யக்கூடாது. மதரஸாக்களில் கல்வியின் கவனம் இஸ்லாமிய கல்வி என்பதால், மதரஸாக்களை மூடிவிட்டு வழக்கமான பள்ளிகளாக மாற்ற முடிவு செய்தோம்”என்று சர்மா கூறினார்.

மேலும், 1,500க்கும் மேற்பட்ட தனியார் மத்ரஸாக்கள் மீது அரசு கடுமையான கண்காணிப்பை மேற்கொண்ட்து. அவை தங்களைப் பதிவு செய்து கொள்ளவும் அங்கு என்ன கற்பிக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. தனியார் மதரஸாக்களில் அறிவியல், கணிதம், புவியியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துமாறு கூறப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள மதரஸாக்களை நடத்தும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து சில வழிகாட்டுதல்களை வகுக்கும்படி மாநில காவல்துறை தலைவருக்கு உத்தரவிடப்பட்டது. அனைத்து மதரஸாக்களின் ஆசிரியர்கள் மற்றும் மசூதிகளில் உள்ள மதகுருமார்களின் நற்சான்றிதழ்கள் காவல்துறையால் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அந்தந்த அமைப்புகளிடம் கோரப்பட்டது.

மதரஸாக்களை நடத்தும் அனைத்து நிறுவனங்களும் கடந்த சில வருடங்களாக தங்கள் நிதி ஆதாரங்கள் மற்றும் வங்கி அறிக்கைகள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மதரஸாக்கள் மற்றும் மசூதிகளுக்கு முஸ்லிம் அமைப்புக்கள், குறிப்பாக வெளிநாட்டு நிதியுதவிகள் கண்காணிக்கப்பட்டன.

 

முக்கியமாக, முஸ்லிம் அமைப்புகள், சமூகத் தலைவர்கள் மற்றும் சாதாரண மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதற்காக பிரச்சார திட்டம் மேற்கொள்ளப்பட்டது. சாதாரண முஸ்லிம்கள் மத்தியில் ஜிஹாதிகள் காணப்பட்டால் இதனால் அவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சமூகத்தலைவர்களுக்கு புரியவைக்கப்பட்டது.

வழக்கமாக, ஒரு தீவிர இஸ்லாமியவாதி அல்லது பயங்கரவாதிகள் கைது செய்யப்படும்போது அப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூக உறுப்பினர்களிடம் அது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும். அது சாமானியர்களுக்கு துன்புறுத்தலாக இருக்கும் என்றாலும் தவிர்க்க முடியாதது. எனவே, தங்களிடையே பயங்கரவாதிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க முஸ்லிம் சமூகத்தலைவர்கள் மற்றும் பெரியவர்களிடம் கோரிக்கைவிடப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகள்தான் அஸ்ஸாமில் மதவாத பயங்கரவாதத்தை குறைத்துள்ளது. இதன்மூலம், மற்ற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அஸ்ஸாம் செயல்படுகிறது.

(நன்றி: https://swarajyamag.com/politics/this-is-how-assam-is-showing-the-way-in-defeating-islamic-radicalism)