அடுத்தடுத்த மர்ம மரணங்கள்

ரஷ்யாவில் கடந்த 9 மாதங்களில் 8 பெரிய தொழிலதிபர்கள் இறந்துள்ளனர் என்பது உலக அலவில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களில் நான்கு பேர் ரஷ்ய எரிசக்தித்துறையே சேர்ந்த காஸ்ப்ரோம் அல்லது அதன் துணை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான லுக் ஆயில் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லுகோயிலின் தலைவரான ரவில் மகனோவ், ஒரு வாரம் முன்பு மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்தார். காஸ்போர்ம் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் போக்குவரத்து சேவையின் தலைவராக பணியாற்றி வந்தலியோனிட் ஷுல்மன் குளியலறையில் இறந்த நிலையில் கடந்த ஜனவரி 30 அன்று கண்டெடுக்கப்பட்டார். காஸ்போர்ம் நிர்வாகியான அலெக்சாண்டர் தியுலாகோவ் ரஷ்யா உக்ரெய்ன் மீது போர் தொடக்க தொடங்கிய இரண்டு நாட்களில் அதாவது பிப்ரவரி 25ம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வீடு கேரேஜில் இறந்து கிடந்தார். இவரும் தற்கொலை செய்துக்கொண்டாதாக செய்திகள் வெளியாகின. 66 வயதான உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் வாட்ஃபோர்ட், பிப்ரவரி 28 அன்று தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் மரணமடைந்தார்.  இதற்கு என்ன காரணம் என இப்போது வரை தெரியவில்லை. காஸ்ப்ரோம் வங்கியின் முன்னாள் துணைத் தலைவரான விளாடிஸ்லாவ் அவயேவ் ஏப்ரல் 18 அன்று மாஸ்கோ குடியிருப்பில் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. மறுநாள் ஏப்ரல் 19ல், ரஷ்யாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான நோவடெக்கின் முன்னாள் உயர் மேலாளரான செர்ஜி புரோட்டோசென்யா தனது மனைவி மற்றும் மகளுடன் ஸ்பெயினில் உள்ள ஒரு வில்லாவில் இறந்து கிடந்தார். பிரத்யா கரவாயேவி உணவக சங்கிலியின் முன்னாள் இணை உரிமையாளரான 4விளாடிமிர் லியாகிஷேவ், அவரது அப்பார்ட்மெண்ட்டின் 16வது மாடி பால்கனியில் மே 4ம் தேதி இறந்து கிடந்தார் என்று ரஷ்யாவின் ஆர்.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது. காஸ்ப்ரோமுக்கான ஆர்க்டிக் ஒப்பந்தங்களில் பணிபுரிந்த அஸ்ட்ரா ஷிப்பிங்கின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான யூரி வோரோனோவ், லெனின்கிராட் பிராந்தியத்தில் உள்ள ஒரு வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தார். அவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கான காயம் இருந்தது.