மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்தின், 75வது ஆண்டு கூட்டம் நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசுகையில், வங்கிகளில் வாடிக்கையாளர்களை கையாளும் பணியில், உள்ளூர் மொழியில் பேசத் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும். நம் நாடு பன்முகத் தன்மை உடையது என்பதை புரிந்து செயல்பட வேண்டும். உங்களுக்கு சேவை செய்யத் தயாராக உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கை, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.