மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரி பி.கே.சிங், வட மாநிலங்களில் உள்ள சி.என்.ஐ கிறிஸ்தவ சர்ச்சுகளின் பிஷப்பாக உள்ளார். இவர் சி.என்.ஐக்கு சொந்தமான ஜிம்கானா கட்டடத்தை ரியாஸ் என்பவருக்கு கடந்த 2016ல் ரூ.3 கோடிக்கு குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது. மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமுக்கு ரியாஸ் மிகவும் நெருக்கமானவர். மும்பையின் வெர்சோவா பகுதியைச் சேர்ந்த ரியாஸ் மீது மிரட்டி பணம் பறித்தல், நில மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக உள்ள ரியாசை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரியாஸ் மற்றும் பாதிரியின் பணப்பரிமாற்றங்கள் குறித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் சமூக ஆர்வலர் நிலேஷ் லாரன்ஸ், மத்திய பிரதேச பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் அலுவலகம், அமலாக்கத் துறைக்கும் இந்த புகாரை அனுப்பினார். இதன் அடிப்படையில், பி.கே.சிங்குக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் மத்தியப் பிரதேச பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி திடீர் சோதனை மேற்கொண்டனர். சோர்தனையில் வெளிநாட்டு கரன்சி உட்பட சுமார் ரூ. 2 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பாதிரிக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புள்ளதா என புலனாய்வு அமைப்புகள் விசாரணை செய்து வருகின்றன.