உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதிக்கு எதிரான வழக்கு விசாரனைக்கு உகந்ததா என்ற வழக்கை விசாரித்துவந்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு உகந்ததே என கூறி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஞானவாபி குழு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, இந்த வழக்கு தீர்ப்பை முன்னிட்டு வாரணாசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டது.