நினைவுகூர்ந்த பிரதமர்

1893ம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய தலைசிறந்த உரையை பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்த பிரதமரின் டுவிட்டர் பதிவில், “செப்டம்பர் 11ம் தேதி, சுவாமி விவேகானந்தருடன் சிறப்பு தொடர்புள்ள தினமாகும். 1893ம் ஆண்டு இதே நாளில்தான் சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் தமது தலைசிறந்த உரைகளுள் ஒன்றை வழங்கினார். அவரது உரை, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த ஒரு பார்வையை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது.” என கூறியுள்ளார்.