தேசிய கல்விக் கொள்கை தேசத்தை மாற்றும்

செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் அமைந்துள்ள கோகுலம் பொதுப் பள்ளியில், வித்யா பாரதி அமைப்பு சார்பில், ‘புதிய தேசிய கல்விக் கொள்கை 2020’ குறித்த கருத்தரங்கு, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, “நமது நாட்டில் 1960, 1980 ஆண்டுகளில், இரண்டு முறை கல்விக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், முதல் முறையாக தேசிய அளவிலான கல்விக் கொள்கை 2020 தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது, எதிர்காலத் தேவையை நிறைவேற்றுவதாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகின்றன. உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் பாரதம் உள்ளது. பொருளாதார ரீதியில் வேகமாக வளரும் நாடாகவும் உள்ளது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபோது நம்முடைய கல்வி முறையை அழித்து விட்டனர். அதற்கு முன்பு நமது தேசத்தில் மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள், குருகுலம் அமைப்புகள் இருந்தன. தாய் மொழியில் கல்வி கற்றோம். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்ல உறவு இருந்தது. ஆசிரியர்களும் அறிவுஜீவிகளும் சமூகத்தில் மதிக்கப்பட்டனர். தற்போது, நம் நாட்டில் தாய்மொழி வழிக் கல்வி இல்லை. ஆங்கிலத்தில் கல்வி கற்று வருகிறோம். பிறமொழி கற்றுக் கொள்வது நல்லது தான். ஆனால், ஆங்கிலத்தில் படிப்பது என்பது பெரிதல்ல. பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளில் அவரவர் தாய்மொழிகளில் கல்வி கற்கின்றனர். அவரவர் தாய்மொழியில் படிப்பது நல்லது. புதிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கற்பதை ஊக்குவிக்கிறது. நமது அறிவு களஞ்சியத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு தேசிய கல்விக் கொள்கை உதவிம். பாரதம் மீதான வெளிநாட்டினரின் பார்வை மாறி உள்ளது. இதில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகம். அனைவரும், தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். வரும் 2047ம் ஆண்டு 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமானவை. தேசிய கல்விக் கொள்கை தேசத்தை மாற்றி அமைக்கும்” என பேசினார்.