ஆர்.எஸ்.எஸ் சமன்வய பைட்டக்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அமைப்புகளின் மூன்று நாள் அகில பாரத சமன்வய பைட்டக் (ஒருங்கிணைப்பு கூட்டம்) சத்தீஸ்கர் மாநிலத் தலைநகரில் நேற்று (செப்டம்பர் 10) துவங்கியது. வரும் 12ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சேவை செய்யும் அமைப்புகள் கலந்துகொண்டுள்ளன. இந்த கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.

அர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே மற்றும் டாக்டர் கிருஷ்ண கோபால், டாக்டர் மன்மோகன் வைத்யா,  அருண் குமார், முகுந்தா, ராம்தத் சக்ரதார் ஆகிய ஐந்து துணை செயலாளர்கள் மற்றும் அமைப்பின் பிற முக்கிய அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் வித்யா பாரதி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், சக்ஷம், வனவாசி கல்யாண் ஆசிரமம், சேவா பாரதி, விஷ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய சேவிகா சமிதி, பா.ஜ.க, அகில பாரதிய மஸ்தூர் சங்கம், அகில பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட 36 அமைப்புகள் கலந்து கொள்கின்றன. சமூகத்தில் செயல்படும் இந்த அமைப்புகள், சமூக காரணங்களுக்காகவும் தேசியவாதத்திற்காகவும் சேவை செய்து வருகின்றன. அத்தகைய அமைப்புகளில் செயல்படும் ஸ்வயம்சேவகர்களை சங்கம் ஒருங்கிணைக்கிறது.

இந்தக் கூட்டத்தில் அந்தந்த அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுடன், சுற்றுச்சூழல், குடும்ப விழிப்புணர்வு மற்றும் சமூக நல்லிணக்கம் போன்ற தலைப்புகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் பற்றிய விவாதம் நடைபெறும். மேலும், இந்த சந்திப்பின் போது கோ சேவா, சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கருத்தியல் துறை, பொருளாதார உலகம், சேவைப் பணிகள் மற்றும் பல்வேறு சமூக மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பிரச்னைகளும் விவாதிக்கப்படும்” என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரச்சார பிரமுகர் சுனில் அம்பேகர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.