அன்று வேண்டாம் இன்று வேண்டும்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக அமைச்சர் எ.வ.வேலு, ‘தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் சில திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும். சென்னை கன்னியாகுமரி சாலையை 6 அல்லது 8 வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும். மாமல்லபுரம், தஞ்சாவூர் பெரியகோயில் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலைக்கான இணைப்புச் சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கவேண்டும். மாநிலச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்புகளை மேம்படுத்த சிறப்பு நிதியை தர வேண்டும். சில பகுதிகளில் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். இதே தி.மு.கவினர்தான் எதிர் கட்சியாக இருந்தபோது, சேலம் சென்னை எட்டு வழி சாலைத் திட்டத்தை எதிர்த்தவர்கள். ஆனால், பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தபிறகு தாங்கள் எதிர்த்த திட்டங்களையே வேறு பெயரில் நிறைவேற்ற மத்திய அரசிடம் காவடி தூக்குகின்றனர்.