கல்வான் பள்ளத்தாக்கில் பாரத சீன ராணுவத்தினர் மோதல், போர் பதற்றத்தைத் தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளும் வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டன. இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே படைகள் குறைப்பு குறித்து தொடர் பேச்சு நடந்தது. ஜூலையில் நடந்த 16வது சுற்று பேச்சில், எல்லையில் குவித்துள்ள வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க இருதரப்பு அதிகாரிகளிடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, கிழக்கு லடாக்கின் கோக்ரா ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து இரு நாட்டு வீரர்களும் திரும்ப பெறப்படுகின்றனர். பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை பாலி தீவில் சந்தித்து பேசிய அடுத்த 10 நாட்களில் 16வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.