மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பெரிய அளவில் லவ் ஜிஹாத் நடப்பதாக மாநிலங்களவை எம்.பி அனில் பாண்டே குற்றம் சாட்டியுள்ளார். “ஹிந்துப் பெண்களை கவர்ந்திழுக்கும் மற்றும் போலி காதல் பொறியில் சிக்க வைக்கும் ஆண்களை, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு பல பெண்கள் காணாமல் போன லவ் ஜிஹாத் தொடர்பான 20 வழக்குகள் வெளிவந்துள்ளன. இதில் சிக்கும் பல சிறுமிகளும் பெண்களும் விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். ஹிந்து பெண்கள் தங்கள் வாழ்க்கையை அழிக்கக்கூடிய எந்த தூண்டுதலுக்கும் விழ வேண்டாம். மருந்துகடை உரிமையாளர் உமேஷ் கோல்ஹேவின் கொலையாளி ஷேக் இர்ஃபான் மீதும் லவ் ஜிஹாத் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் இந்தூரில் திருமணமான இந்து பெண்ணை குளோரோஃபார்ம் பயன்படுத்தி மயக்கமடையச் செய்து இர்பான் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குள்ளது. இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, அமராவதியில் லவ் ஜிஹாத்தை தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறை நடத்த வேண்டும்” என கூறினார். மேலும், இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு லவ் ஜிஹாத் வழக்குகளையும் பட்டியலிட்டார்.