காங்கிரஸின் பாரத் ஜோடோ என்ற பாதயாத்திரை ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து நேற்று துவங்கியது. 60 ஏ.சி கேரவன்கள் உள்ளிட்ட வசதிகளுடன் நடத்தப்படும் உலகிலேயே மிகவும் சொகுசான பாத யாத்திரை இது என மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர், இந்த சூழலில், இதுகுறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “1947ல் காங்கிரசின்போது தான் பாரதம் பிளவுபட்டது. எனவே, அவர்கள் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்க விரும்பினால், ராகுல் காந்தி பாகிஸ்தானில் இதை செய்ய வேண்டும். ஏற்கனவே ஒன்றிணைக்கப்பட்டுள்ள தற்போதைய பாரதத்தில் இந்த யாத்திரை செய்வதால் என்ன பலன்? பாரதம் இணைக்கப்பட்டுள்ளது, ஒன்றுபட்டுள்ளது” என கூறினார்.