தரமான கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த சிறப்பு கருத்தரங்கில் தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழு தலைவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி வழங்கவே புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் பாரத மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். உலகின் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக பாரதம் உருவெடுக்கும். இதை சிறப்பாக பயன்படுத்த வேண்டுமென்றால் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும். இதற்காகத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இது மாணவர்களின் ஆராய்ச்சி திறன்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்தவும், அவர்கள் தங்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது” என கூறினார்.