லவ் ஜிஹாத் வழக்கில் திருப்புமுனை

ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் கடந்த ஆகஸ்ட் 22 நள்ளிரவில் 12ம் வகுப்பு மாணவியான அங்கிதா சிங் தூங்கிக் கொண்டிருந்த போது, ​​ ஷாருக் உசேன் மற்றும் நயீம் ஆகிய இரு முஸ்லிம் நபர்கள் அந்த சிறுமியின் அறையின் ஜன்னலுக்கு வெளியில் இருந்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 28 அன்று உயிரிழந்தார். இந்த லவ்ஜிஹாத் கொலையில் ஈடுபட்ட ஷாருக் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஷாருக்கிற்கு பெட்ரோல் சப்ளை செய்த நயீம் என்கிற சோட்டு கானையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் தற்போது குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் மற்றும் நயீம் ஆகியோர் ஆகஸ்ட் 22ம் தேதி இரவு உள்ளூர் எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் வாங்குவதைக் காட்டும் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளது. இது, அங்கிதா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்க முக்கிய ஆதாரமாக இருக்கும் என ஜார்கண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக இவ்வழக்கில் நூர் முஸ்தபா அன்சாரி என்ற காவல்துரை அதிகாரி, ஷாருக் உசேனுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) அமைப்பும் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகிறது. அதன் தலைவர் பிரியங்க் கனூங்கோ பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையும் நேரில் சென்று சந்தித்தார்.