பட்டியலின பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் முக்கிய கனவு. அதனை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, பட்டியலின மக்கள், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அவற்றில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் திட்டடத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ரூ. 53.73 கோடியை ஒதுக்கியுள்ளது. அவ்வகையில் தற்போது, காஸிபூரில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், பல்நோக்கு கருத்தரங்க வளாகங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தியோரியா, ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்வர் பகுதிகளிலும், விடுதி, அரசு ஹோமியோபதி மருத்துவமனை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இங்கு வசிப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் மேல் சிறுபான்மை இனத்தவர்கள். இப்படி, மொத்தம் 14 திட்டங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்தகவலை உ.பி’யின் சிறுபான்மை நலத்துறை இணையமைச்சர் டேனிஷ் அன்சாரி தெரிவித்துள்ளார். இதுவல்லவோ உண்மையிலேயே அனைவருக்குமான அரசு