இந்திய கப்பற்படைக்கு புதிய கொடி

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற விழாவில் இந்திய கப்பற்படைக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த கொடி அகற்றப்பட்டு, மகாராஜா சத்ரபதி சிவாஜி முத்திரை பொறிக்கப்பட்ட புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய கொடியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வழங்கினார். இதற்கு முன் இருந்த பழைய கொடி புனித ஜார்ஜின் கிராஸ் அடையாளத்துடன் தேசியக் கொடியும் இருந்து. அந்தக் கொடி நீக்கப்பட்டு தற்போது மூவர்ணக் கொடியும், எண்கோணத்தில் தேசியசின்னம் மற்றும் நங்கூரத்தின் அடையாளம் உள்ளது போன்று கொடி வடிமைக்கப்பட்டுள்ளது. கடற்படையின் கொடியில் உள்ள எண்கோணம் என்பது 8 திசைகளையும் குறிக்கிறது. நங்கூரம் அடையாளம் என்பது, காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. கொடியில் உள்ள அடர்நீலம் வண்ணம், இந்திய கடற்படை கடல்பரப்பில் வல்லமைவாய்ந்ததை குறிக்கிறது. கொடியில் உள்ள எண்கோணத்துக்கு இரு பார்டர்கள் கொடுக்கப்பட்டது என்பது சத்தரபதி சிவாஜி ராஜமுத்திரையைப் பார்த்து எடுக்கப்பட்டது என்று கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆகஸ்ட் 15ம் தேதி அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் கொடி மாற்றப்பட்டது. துணை அட்மிரலாக இருந்த விவியன் பார்போசாவின் ஆலோசனையில் கொடிமாற்றப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் பழையகொடி கொண்டுவரப்பட்டு நீல நிறம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபின் கடற்படைக் கொடியில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் புனித ஜார்க் கிராஸ் கொண்டுவரப்பட்டு அதில் தேசியக் கொடியும், தேசியச்சின்னமும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக தற்போது கொடி மாற்றப்பட்டுள்ளது.