வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்

வங்கதேசத்தில் கடந்த சில காலங்களாக ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களும் வன்முறைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசியல்வாதிகள் துணையுடன் உள்ளூர் மதரஸாக்களும் மசூதிகளும் ஹிந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்குகின்றன. அவ்வகையில் வங்கதேசத்தின் சிட்டகாங்கின் கட்டாலி என்ற இடத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஹிந்துக்கள் வைத்திருந்த விநாயகர் சிலையை அங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் தாக்கி உடைத்து சேதப்படுத்தினர். உள்ளூர் ஹிந்துக்கள் இதனை எதிர்த்தபோது, ​​முஸ்லிம் குண்டர்கள் கற்களை வீசியும் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களாலும் அவர்களை தாக்கினர். மேலும், கோயில் வாசலில் மசூதியின் நன்கொடைப் பெட்டியை வைத்தனர். இதற்கு வங்கதேச ஹிந்துத் தலைவர் ஜூமோன் தாஸ் சமூக ஊடகம் வாயிலாக எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், அங்குள்ள காவல்துறையினர், குற்றவாளிகளை கைது செய்யாமல் ஜூமோன் தாசை கைது செய்தனர். இதற்கு தாஸின் ஊடகப்பதிவு வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டும் என்று காவல்துறை ஒரு விசித்திர காரணத்தைக் கூறியது. முஸ்லிம் தீவிரவாதிகள் வைத்த நன்கொடை பெட்டி இன்னும் அங்கிருந்து அகற்றப்படவில்லை.