தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், கிறிஸ்தவ விழாக்கள், முஸ்லிம் பண்டிகைகள் அனைத்திலும் கலந்துகொள்வதோடு வாழ்த்தும் சொல்வார். ஆனால், ஹிந்துக்கள் விழா என்றால் மட்டும் கலந்துகொள்ளவும் மாட்டார், வாழ்த்துத் தெரிவிக்கவும் மாட்டார். அவரது கட்சியான தி.மு.க மற்றும் அதன் தாய் அமைப்பான தி.கவின் ஆண்டாண்டுகால ஹிந்து விரோத செயல்பாட்டை தொடர்ந்து அப்படியே பின்பற்றி வரும் ஸ்டாலின், வழக்கம்போல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும் வாழ்த்து தெரிவிக்காமல் விட்டுவிட்டார். இது குறித்து மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்து திருவிழாக்களுக்கும், அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்கவேண்டும். தி.மு.க தலைவராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அவரது விருப்பம். ஆனால், முதல்வராக இருப்பவர் கட்சி சார்பற்ற முறையில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம்” என தெரிவித்தார். இந்த சூழலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.