ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவி அங்கிதா சிங்கை ஷாருக் ஹுசைன் என்ற முஸ்லிம் நபர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிதாவை கொலை செய்த கொலைகாரன் ஷாருக் கைது செய்யப்பட்டு அழைத்து செல்கையில் சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி ஒரு மிருகம் போல சிரித்துக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் மக்கள் மனதில் வேதனையையும்கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலையாளி ஒரு முஸ்லிம் நபர் என்ற காரணத்தால் அங்கிதா கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட டி.எஸ்.பி நூர் முஸ்தபா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், இந்தியா டுடே என்ற ஆங்கில மொழி ஊடகம், இந்த செய்தியில் வழக்கம்போல, காலனித்துவப்படுத்தப்பட்ட, ஹிந்துக்களுக்கு எதிரான தனது இடதுசாரி மனப்பாங்கை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் செய்பவர் ஒரு முஸ்லிம் நபர், கொல்லப்பட்டவர் ஒரு ஹிந்து பெண். இது ஒரு லவ் ஜிஹாத் கொலை என்பதால் செய்தியை அது திரித்து வெளியிட்டுள்ளது. அதன் ஆரம்பகட்ட செய்தியில் கொலையாளி ஷாருக் ஹுசைன் என்பதற்கு பதிலாக அபிஷேக் என்று மாற்றி வெளியிட்டது. மேலும், செய்தி முழுவதும் அங்கிதாவை ‘பெண்’, ‘தும்கா மாவட்டத்தை சேர்ந்த பெண்’ என்றெல்லாம் கூறப்பட்டு இருந்ததே தவிர அவரது உண்மை பெயரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்த பிறகு வேறுவழியின்றி கொலையாளியின் உண்மை பெயரை வெளியிட்ட இந்தியா டுடே, தவறு சரி செய்யப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறோம் என தெரிவித்தது. எனினும், அந்த செய்தியில் அங்கிதாவின் பெயர் இடம்பெறவில்லை.