கேரள சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே,டி ஜலீல், தனது சமூக உடக பக்கங்களில் சர்ச்சைக்குரிய விதத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆசாத் காஷ்மீர் என்றும் ஜம்மு காஷ்மீரை பாரத ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும் பதிவிட்டார். ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தேசத்தின் இரையாண்மைக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்து கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கேடி ஜலீல் மீது நடவடிக்கை எடுக்க அருண் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அருண் நீதிமன்றத்தை அணுகினார். ஜலீல் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலித்த நீதிபதி கே.டி ஜலீல் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து வேறுவழியின்றி ஆசாத் காஷ்மீர் குறித்து பேசியதாக கே.டி.ஜலீல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக, பாரதத்தின் அரசியல் சாசனத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் சஜி செரியன் மீது வழக்குப்பதிவு செய்ய இதே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நினைவு கூரத்தக்கது.